அறிமுகம்
பாடசாலை ஆரம்பத்திகதி 1947.06.03 அன்று பழைய கிராமத்தில் ஆரம்ப பாடசாலை என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை ஆரம்பத்தில் 21 மாணவர்கள் காணப்பட்டனர். ஆசிரியர் தொகை 1. அவரே அதிபராகவும் காணப்பட்டார். ஆரம்ப அதிபராக யாழ்பாணத்தை சேர்ந்த திரு. வீ. சின்னய்யா என்பவர் கடமையாற்றினார். 1947 இல் இப்பாடசாலை அப்போதிருந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 1950.05.24 இல் யாழ்பாணத்தை சேர்ந்த திரு. IC. சாமுவேல் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.

1957.12.25 இல் ஏற்பட்ட கரையோர வெள்ளப்பெருக்கின் பின்னர் இப்பாடசாலை பழைய கிராமத்திலிருந்து மேற்குப்புறமாக 1 km அப்பால் BOP 649 என்னும் கிராமத்திற்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டது. 1965.08.31 இல் நிரந்தர கட்டிடமொன்று நிறுவப்பட்டது. அப்போது 3 ஆசிரியர் விடுதிகளும் அமைக்கப்பட்டன. 114 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் காணப்பட்டனர். 1977 இல் கனிஷ்ட இடைநிலைப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு முதலாம் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்டது. 1985 இல் 80* 20 கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. 1987 இல் 500 மாணவர்களையும் 13 ஆசிரியர்களையும் கொண்டு காணப்பட்டது. அதிபராக UL. ஹபீப் லெப்பை கடமையாற்றினார்.
1992 இல் க.பொ.த சாதாரன தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு 1992.06.26 அன்று அனுமதி கிடைக்கப்பெற்றது. 1992 பயங்கரவாத செயல்கள் காரணமாக அயற்கிராமங்களான பங்குரானை, பள்ளித்திடல், அஹமட்புரம், அக்பர்புரம் போன்ற கிராமங்களில் இருந்த அனைத்து மாணவர்களும் இப்பாடசாலையில் சேர்ந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேற்ப்பட்டது. அதிபராக SL. புஹாரிதீன் கடமையாற்றினார். 1994.05.16 ஆம் திகதி மஹா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டதுடன் முதல் முறையாக க.பொ.த உ /த வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன.