பாடசாலை கீதம்
அருள் மழை பொழியும் அல்லாஹ் நாமம் அனுதினம் புகழ்வோமே
மாசரக் கற்று மாண்புகள் பெற்று மாநபி தொடர்வோமே.
அருள் மழைபொழியும் அல்லாஹ் நாமம் அனுதினம் புகழ்வோமே. (மாசரக்)
அல்லாஹ் எமக்கருள் புரிவாய்
அன்பையும் அறிவையும் சொரிவாய்
பண்பினில் உயர்ந்து படிப்பினில் மிழிர்ந்து
பார்புகழ் பெறச் செய்வாய்
பெற்றோர்க்கருள் புரிவாயே
உற்றோர்க்குதவி செய்வாயே
அதிபராசிரியர் நாட்டுக்கும் கருணை
மழையினைப் பொழிவாயே (மாசரக்)
பணிவையும் துணிவையும் தருவாய்
பல்கலை ஞானமும் அருள்வாய்
பாலர்கள் நாங்கள் பணிவுடன் ஏந்தும்
பிரார்த்தனையை ஏற்பாயே
சுங்காவில் கலையகம் சிறக்க
சுபிற்சமும் உயர்ச்சியும் நிலைக்க
அறியாமை இருள் இங்கு இறக்க
அகிலத்தில் நம் புகழ் மணக்க
உன்னருள் கொண்டு உத்தமங்கண்டு உயர்வுடன் திகழ்வோமே (மாசரக்)
கல்விக்கடல் கஸ்ஸாலி கல்பினை யெனக்களிப்பாயே
செய்த பிழைகளைப் பொறுப்பாய் செய்யாமலெனைத் தடுப்பாய்
செவ்வியவாழ்வை ஜெகத்தினில் அளித்து
ஜெயம் பெறச் செய்வாயே (மாசரக்)