2022 - 2023ம் ஆண்டின் விளையாட்டுதுறையில் சிறந்த பாடசாலை விருது - பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்தின் 2022 - 2023 கல்வியாண்டின் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய பாடசாலையை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04.08.2023) பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் மைத்திரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய பாடசாலைகள் கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய S. சப்ரான் விருதுகளைப் பெற்றமை எமது பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் விடயமே.
இக்கௌரவிப்பு நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுள் பொ / சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயம் மாத்திரமே தமிழ் மொழி மூல பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விளையாட்டுத் துறையில் எமது பாடசாலை தொடர்ச்சியாக சிறந்த அடைவுகளைப் பெறுவதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் விளையாட்டு துறை ஆசிரியர் H.M பஸ்மீர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் S.M நிப்ராஸ் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிபர் - பொ / சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயம